அண்மையில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படம் பெண்களை அருவருப்பான வகையில் சித்தரிப்பதாகவும், மிகுந்த வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெண்களை உடலியல் ரீதியாகச் சித்தரித்து வசூல் வெறியைத் தூண்டும் இந்தப் போக்கை திரைப்படங்களில் யார் கடைப்பிடித்தாலும் அதை கண்டிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கியவர் கீது மோகன்தாஸ் என்ற பெண் இயக்குநர் என்பதால், இதுகுறித்த தனது கண்டனத்தை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கன்னடத் திரையுலகைச் சேர்ந்த ஒரு நடிகை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். சிநேகிதிகளே, பெண்களைத் தவறாகச் சித்தரிக்கும் போக்கு வெளிப்படும்போதெல்லாம் பெண்ணியவாதிகளும் பெண் எழுத்தாளர்களும் கொந்தளித்துக் கண்டிப்பது வழக்கம். அப்படியிருக்க, கீது மோகன்தாஸின் இந்த ‘சேம் சைட் கோல்’ அணுகுமுறையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் மனதில் இருப்பதைப் பளிச் என்று சொல்லுங்கள். உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய இங்குள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, திறக்கும் இணைப்பில் உங்கள் கருத்துகளைத் தட்டச்சு செய்து அனுப்புங்கள்.
